ஸ்மார்ட்போன் வாங்கும் பலரும் அனுபவிக்கும் பிரச்சனை தான் பேட்டரி சீக்கிரம் காலியாவது. இதனால் பவர் பேங்க் எனப்படும் கையடக்க சார்ஜரின் விற்பனை சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றது என்றும் கூறலாம். உங்களது ஸ்மார்ட்போனில் சீக்கிரமாக சார்ஜ் காலியவதற்கான முக்கிய காரணங்கள் எவை என்று பாருங்கள்
செயலி
இலவச செயலி மற்றும் கேம்களை பதிவிறக்கம் செய்யும் போது அதில் இடம் பெறும் விளம்பரங்களே அதிகமாகக் சார்ஜ் எடுத்து கொள்கின்றது. இதனால் அதிக விளம்பரங்கள் இருக்கும் இலவச செயலிகளை பதிவிறக்கம் செய்யாதீர்கள்.
செயலி
நீங்கள் பயன்படுத்தாத சமயத்தில் செயலிகளை ஆஃப் செய்து வைக்க வேண்டும்.
சிக்னல்
உங்களது இருப்பிடத்தில் சிக்னல் எப்படி இருக்கின்றது என்பதையும் பாருங்கள், குறைந்த சிக்னல் இருக்கும் போது போனில் அதிகளவு சார்ஜ் செலவாகும்
ஜிபிஎஸ்
பயன் இல்லாத சமயங்களில் ஜிபிஎஸ் சேவையை ஆஃப் செய்வது சார்ஜ் சீக்கிரம் காலியவதை தடுக்கும்
போன்
நீங்கள் பயன்படுத்தும் கருவியையும் பார்க்க வேண்டும், சிலர் அதிகளவு சிறப்பம்சங்களை கொண்ட போன்களை பயன்படுத்துவர் அதில் சாதாரணமாகவே சார்ஜ் காலியாகும், தினமும் சார்ஜ் செய்வது நல்லது.
0 Comments