இணையம் எவ்வாறு தொழில்படுகின்றது ?
How the Internet Works?
“விரல் நுனியில் உலகம்” இந்த கூற்று நாம்
அறிந்ததுதான். உலகம் முழுவதும் நடக்கும் விடயங்கள் உடனுக்கு உடன் நமக்கு அறிய
வருவது இந்த இணையத்தின் உதவியினால்தான்.
இணையம் இல்லை எனில் இன்றைய வாழ்வியல் முறையில் நாம் எதிர்கொள்ளும் இடர்கள் ஏராளம்.
பலர் தாம் இணையம் பயன்படுதுகின்றோம் என்று அறியாமலேயே பயன்படுத்துகின்றாரகள்.
இன்றைய யுகத்தில் நாம் பயன்படுத்தும் இலத்திரனியல் உபகரணங்கள் அனைத்தும் இணையத்துடன்
தொடர்ப்பு கொள்ளும் காலக்கட்டத்தில் உள்ளோம் என்பது மறுக்க முடியாத உண்மை. சாதாரணமாக
நாம் பயன்படுத்தும் இலத்திரனியல் மின்குமிழ் கூட இணையத்துடன் இணைந்து தொழில்படுகிற
வகையில் தொழில்நுட்பம் விரிவுபட்டுள்ளது. இந்த வகையில் இந்த இணையம் எவ்வாறு தொழில்படுகின்றது
என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. இணையம் என்பது தனி மனிதனுக்கு
சொந்தமானது அல்ல. அதில் பங்கு கொள்ளும் நபர்களே அதை விரிவு படுத்துகின்றார்கள்.
நாம் தான் இணையம். நாமே இணையத்தை உருவாக்குகின்றோம். நாம் ஒவ்வொருவரும் இணையம்
பாவிப்பதை நிறுத்தி விட்டால் இணையம் இல்லாது போய்விடும். இவ் இணையம் எவ்வாறு
தொழில் படுகின்றது என்பதை கீழே பார்ப்போம்.
படி 1
இணைய தொடர்பை ஏற்படுத்த முனைகையில் நாம் முதலில்
ISP (Internet
Service provider) உடன் தொடர்பை
ஏற்படுத்தி கொள்ளவேண்டும். ISP எனப்படுவது வேறு
ஒன்றும் அல்ல. நாம் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள தொடர்பு கொள்ளும் நிறுவனமே. இலங்கையை
பொறுத்த மட்டில் டயலோக், ஏயார்டல், மொபிட்டல் ...... இது போன்ற நிறுவனங்களே. நமக்கு
இணைய தொடப்பை ஏற்படுத்தி தருபவை இது போன்ற நிறுவனங்களே.
படி 2
இணைய தொடர்பை நாம் எவ்வாறு ஏற்படுத்தப் போகிறோம்
என்பதை நாம் முதலில் முடிவு செய்ய வேண்டும்.
- இணைய தொடர்பை ஏற்படுத்தும் முறைகள்.
- கையடக்க தொலை பேசி மூலம்.
- ரௌட்டர் மூலம்.
- வேறு இலத்திரனியல் உபகரணங்கள்.
கையடக்க தொலை பேசி மூலம்
கையடக்க தொலை பேசி மூலம் இணைய இணைப்பை பெற்றுக்கொள்ள்ளும் செயல்
முறை இன்றைய காலத்தில் மிக இலகுவானது மாற்றப்பட்டுள்ளது. சிம் அட்டை நாம் அனைவரும்
அறிந்ததே SIM (subscriber identity module) தொலை பேசிகளில் பயன்படுத்தும் சிம் அட்டை மூலம் இணைய இணைப்பை
நாம் பெற்றுக்கொள்ள முடியும். தொலைபேசி அழைப்பும் இணையத்துக்கான இணைப்பும் ஒரு
நிறுவனத்தால் வழங்கப்படும் வேறு வேறு சேவைகளாகும். Smart Phone களில் Data Service
என்று அழைக்கப்படும் சேவை மூலம் இணையத்தை தொடர்பு கொள்ளும் செயல் முறை சிம் அட்டை
வழங்கிய நிறுவனத்துக்கு அனுப்பப்படுகின்றது.சிம் அட்டை மூலம் தொடர்ப்பு கொள்ளும்
தொலைபேசி மற்றும் ரௌட்டர் மற்றும் சிம் அட்டை பயன்படுத்தும் இணைய உபகரணங்கள்
அனைத்திற்க்கும் பயன்படுத்தும் வாடிக்கையாளர் அனைவருக்கும் ஒரே முறையான செயல் முறையே
நிறுவனத்தால் வளங்கப்படுகின்றது. இணையத்தொடர்புக்கான வேண்டுகோள் ISP க்கு அனுப்பப்படும்
போது நமது இணைய இணைப்பிற்கான கணக்கு மிகுதி சரிபார்க்கப்பட்டு, போதுமான மிகுதி
இருக்கும் பட்சத்தில். நமது வேண்டுகோள் ISP நிலையத்தினுள் இயங்கும் DHCP (Dynamic
Host Configuration Protocol ) சேவையக கணணிக்கு அனுப்பப்படும்.
DHCP சேவையகமானது தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள IP ( Internet protocol )
எல்லைக்குள் இருந்து வாடிக்கையாளரின் கணக்கிற்கு ஏற்ப எழுந்தமானதாக/நிலையான (Dynamic /Static ) IP முவரியை வடிக்கையாளருக்கு
வழங்குகின்றது. இச் செயல் முறைய இணையத்தில் பங்கு கொள்ளும் உபகரணத்தின் முதலாவது
படியாகும். IP முகவரிகள் இல்லாமல் இன்றைய தொழில் நுட்பத்தில் இணைய உபகரணங்கள்
இணையத்தில் இணைய முடியாதது. இவ் IP முகவரிகளே இன்றைய இணைய உலகத்தின் அடித்தலாமாக
இருகின்றது. IP முகவரியை பெற்றுகொண்டத்தின் பின்பே இணையத்தில் தொடர்பாடலை
மேற்கொள்ள முடியும். IP முகவரியானது 112.135.0.215 எனும் வடிவத்தில் காணப்படும் நான்கு பிரிவுகளை
கொண்டதாக காணப்படும் இவை IP Version 4 என்று சுருக்கமாக
IPv4 என்று
அழைக்கப்படும். IPv6 முகவரிகளும் பாவனைக்கு எதிர்காலத்தில் தனை நபர் பாவனைக்கு
வரும். தற்பொழுது பெரும் அளவில் புழக்கத்தில் இருப்பவை IPV4 வகையே.
இவ் IP முகவரிகளை வைத்து இணைய வழங்குனர் , வழங்கப்பட்ட பிரிவு ,இடம்
போன்றவற்றை கணக்கிட முடியும். நமக்கு வழங்கப்படும் IP முகவரிகளை பாதுகாப்பாகவும் ,
ரகசியமாகவும் வைத்துகொள்ளப்பட வேண்டும். இருப்பினும் இன்றைய தோழில்நுட்ப வசதிகள்
இந்த பாதுகாப்பு சேவையை மேற்கொள்வதால் நாம் IP முகவிரி தொடர்பான விழிப்புணர்வு
இல்லாமலே இணையத்தை பயன்படுத்துகிறோம்.
நம எந்த வகையில் இணைய இணைப்பை பெற்றுக்கொண்டாலும் அவற்றின் முதல் படிநிலை IP
முகவரியை பெற்றுக்கொள்வதே.
படி 3
தற்பொழுது இந்த பகுதியை வாசித்துக்கொண்டு இருக்கும் நீங்கள் உங்கள் IP முகவரியை
தெரிந்து கொள்ள வேண்டும் எனில் இணைய இணைப்பை உங்கள் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியில்
கூகிள் சென்று “What's my IP ? ” என தேடுவதன் மூலம் உங்கள் Public IP முகவரியை
அறிந்து கொள்ள முடியும். இவ் Dynamic வகையிலான IP முகவரிகள் ஒவ்வொரு முறை Data
Service செயல்படுத்தும் போதும் மாறிய வண்ணமே இருக்கும். இவ்வாறு மாறுவது நமது
பாதுகாப்புக்கு மேலும் வழிகோள்கிறது.
இக்காலக் கட்டத்தில் இன்டர்நெட் என்றாலே கூகுள் என்றாகி விட்டது.
தொடரும்...................
0 Comments