Ad Code

Responsive Advertisement

இணையம்

இணையம்






இணையம் என்பது ஏதாவதொரு வலையமைப்பின் பயனர்கள், தனக்கு அனுமதி இருப்பின், வேறொரு
வலையமைப்பிலிருந்து தகவல் பெற்றுக் கொள்ளும் வலையமைப்புகளின் வலையமைப்பு என
வரையறுக்கப்படுகிறது. ஐக்கிய அமொpக்காவின் பாதுகாப்புத் திணைக்களம், ARPANET எனும்
வலையமைப்பினூடாக இணையத்திற்கான அடித்தளத்தை ஆரம்பித்தது. இருப்பினும் உலகளாவிய
வலை (Woorld Wide Web) 1990 களின் ஆரம்பகாலத்தில் அபிவிருத்தி அடையும் வரை பொதுமக்கள்
இணையத்தை அதிகளவில் பயன்படுத்தவில்லை.
1957 ல் ஐக்கிய அமெரிக்க அரசாங்க பாதுகாப்புத் திணைக்களத்தின் ஒரு பகுதியினூடாக Advanced Research Projects Agency (ARPA) எனும் செயற்திட்டத்தை உருவாக்கிஇ விஞ்ஞானம் மற்றும்
தொழினுட்பம் என்பவற்றில் இராணுவ பிரயோகங்கள் கொண்டுவரப்படுவதை அமெரிக்க
தலைமைத்துவத்திற்கு உறுதியளிக்கப்பட்டது. 1969 (ARPA) இணையத்தின் முன்னோடியான
ARPANET ஐ நிறுவியது. ARPANET எனும் வலையமைப்பு முதலில் பல்கலைக்கழகங்களிலுள ;ள
பிரதான கணினிகளை இணையத்ததுடன் இணைத்துக்கொண்டதுடன், ஏனைய கல்வி மற்றும் ஆராய்ச்சி
நிறுவகங்களைப் பின்னர் இணைத்துக் கொண்டது.
அணுகுண்டுத் தாக்குதல் அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கும் வகையில் ஒன்றௌ அல்லது பல
தளங்களோ சேதப்படுத்தப்பட்டாலும் தொடர்ச்சியான தொடர்பாடலை மேற்கொள்ளக்கூடிய வகையில்
ARPANETவடிவமைக்கபட்டது. ARPANETஆரம்பத்தில் கணினி தொழில் வல ;லுனர்கள்,
பொறியியலாளர்கள்,, விஞ்ஞானிகள் போன்றௌரின் சிக்கலான வேலைகளுக்கு உதவும் வகையில்
இருந்தது. இணையமானது இன்று பொதுவான, கூட்டுறவு மற்றும் தனித்தியஙூ ;கக் கூடிய வசதிகளை
உலகளாவிய ரீதியில் மில்லியன் அளவிலான மக்கள் அணுகக் கூடிய வகையில் அமைந்துள்ளது.
பௌதீக ரீதியாக, பொதுத் தொடர்பாடல் வலையமைப்பில் இருக்கும் மொத்த வளங்களில்
ஒருபகுதியை இணையம் பயன்படுத்துகிறது. இணையம் TCP/IP (Transmission Control Protocol/Internet Protocol)
 எனும் நெறிமுறைத் தொகுதியொன்றைப் பயன்படுத்துகிறது. நெறிமுறை என்பது
வலையமைப்புகளினூடாகத் தகவல் பரிமாற்றலுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்படிக்கை அல்லது சட்டம ;
ஆகும். TCP என்பது நம்பகமான பரிமாற்றல் நெறிமுறையாகும்.
உலகளாவிய வலை (WWW)இ கோப்பு பரிமாற்றம் (FTP)இ மின்னஞ்சல், கானொளி மாநாடு,Telnet
கோப்புப் பகிர்வு, இணைய இடைவினை புரிதல், இணைய தொலைபேசி (ஐPவூP) மற்றும் இணைய
தொலைக்காட்சி (IPTV) என்பனவூம் இணையத்தினால் வழங்கப்படும் சேவைகளாகும். கடித தபால் முறை மின்னஞ்சலினால் பதிலீடு செய்யப்பட்டுள ;ளது. Internet Relay Chat (IRC)  இனைப்
பயன்படுத்தி ஒரு கணினியிலிருந்து மற்றக் கணினியுடன் நிகழ்நேர வாசக இடைவினை புரிய
முடிவதுடன், அண்மைக்கால வன்பொருள் மற்றும் மென்பொருள் என்பன இணைய
தொலைபேசிக்கான நிகழ்நேர உரையாடல்களை மேற்கொள்வதற்கு வசதியளிக்கின்றது. காணொளி
மாநாடு தொழினுட்பங்களைப் பயன்படுத்தி நிகழ்நேர காணொளி போன்றவற்றை வலையமைப்பின்
ஊடாகப் பரிமாற்றஞ் செய்யலாம். பயனர் விரும்பும் நேரத்தில் விரும்பிய இடத்திலிருந்து இணையத்தில்
விநியோகிக்கப்பட்டுள ;ள வலைப்பக்கங்களைப் பார்ப்பதற்கும்இ தேட விரும்பும் தகவலை அடைவதற்கும்
உலகளாவிய வலை வசதியளிக்கின்றது. அதேபோன்று, கோப்பு பரிமாற்றம் இணையத்தினூடாகக்
கோப்புகளைப் பரிமாறுவதற்கும்இ, Telnet தொலை அணுகலுக்கும் வசதியளிக்கின்றது.

Post a Comment

0 Comments

Close Menu