Ad Code

Responsive Advertisement

தரவும் தகவலும்

தரவும் தகவலும்










தரவைத் தனியாக எடுத்துக் கொண்டால் அதன் பயன்பாடு அரிதாகவே இருக்கும். தரவைத் தகவலாக மாற்றுவதற்கு அதனைச் சரியான சந்தர்பத்தில் பிரயோகிக்க வேண்டும். தரவினை அளவூசார் மற்றும் பண்புசார் என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அளவுசார் தரவு எண்சார்புடையதால் அதனை எண்ணுதல் அல்லது அளத்தல் மூலம் பெற்றுக்கொளளலாம். எண்சார் தரவினை இலக்கங்கள் மூலம் காட்டப்படக் கூடியதாக உள்ளதுடன் அவற்றை இலக்கமுறை வரிசைப்படுத்தல்களுக்கு அல்லது கணித செயற்பாடுகளுக்கு உட்படுத்தலாம். பண்புசார் தரவூகளை அளக்க முடியாதெனினும் அவற்றின் இயல்புகளை அடையாளம் காணலாம்.

உதாரணம்:
பண்புசார் தரவு - ஒரு நிறுவனத்தின் நன்மதிப்பு
தரவு முறைவழியாக்கல் தகவல்
34
அளவுசார் தரவு -ICT  வினாப்பத்திரத்திற்குப் பெறப்பட்ட புள்ளிகள்


பெறுமதி வாய்ந்த தகவல்கள் அவற்றின் பொருத்தம்/ காலம்/ துல்லியம்/ முழுமை/ விளங்கிக்
கொள்ளக்கூடியதன்மை போன்ற பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். பெறுமதி வாய்ந்த தகவல்
மிகச்சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு உதவுகின்றது.
பொருத்தம் - தகவலின் பெறுமதி குறித்த நபருக்கு அதன் பொருத்தத்தில் தங்கியிருக்கும்.
காலம் - தகவல் தற்காலப்படுத்தப்படல் வேண்டும். பயனுள்ள தீர்மானங்களை எடுப்பதற்கு காலப்
பொருத்தமுள்ள தகவல் பெறுமதிமிக்கதாயுள்ளது.
துல்லியம் - சரியான தீர்மானங்களை எடுப்பதற்குத் துல்லியமான தகவல் உதவியாக அமைகிறது.
முழுமை - சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான தகவல்களை வழங்குவது பிரயோசனமாய் அமைவதுடன்
முழுமை பெறாத தகவல்கள் தீர்மானங்களை மேற்கொள்வதற்குப் போதுமானதாக இருக்காது.
விளங்கிக் கொள்ளக்கூடியமை - தகவல் தெளிவானதாகவும் குழப்பநிலையற்றதாகவும்
இருக்கவேண்டும்.
தகவலின் பொன் விதிக்கமைய ((Golden Rule)) தகவலின் பெறுமதி அதன் உருவாக்கத்தின் போது
அல்லது வெளியிடப்படும் போது உச்ச மட்டத்தில் இருப்பதை வரைபடம் மூலம் காட்டப்பட்டுள ;ளது.
காலம் செல்லச்செல்ல அதன் பெறுமதி படிப்படியாகக் குறைந்து செல்கின்றது.







Post a Comment

0 Comments

Close Menu