Ad Code

Responsive Advertisement

IP முகவரி தொடர்பான அறிமுகம்

இன்டர்நெட் புரோட்டோகால் (ஐபி) அட்ரஸ் எனப்படும் இணைய நெறிமுறை (இ. நெறி ) முகவரி என்பது ஓர் எண் அடையாளமாகும். குறிப்பாக கணினி வலையமைப்புகளில் இருக்கும் உபகரணங்களுக்கு இடையே இணைய நெறிமுறையைப் பயன்படுத்தும் போது இந்த எண் அடையாளம் அளிக்கப்படுகிறது.[1] இ.நெறி முகவரியானது வலையமைப்புகளில் இரண்டு முக்கிய செயல்பாடுகளைச் செய்கிறது: ஒன்று, புரவன் (host) அல்லது வலையமைப்பின் இடைமுகத்திற்கு எண் அடையாளம் அளிப்பது; மற்றொன்று, அந்த புரவன் அல்லது வலையமைப்பு அமைந்திருக்கும் இடத்தைக் குறிப்பிட்டு காட்டுவது.

TCP/IP நெறிமுறையை வடிவமைத்தவர்கள், இன்றும் பயன்படுத்தப்பட்டு வரும் 32-பிட் எண்ணை[1] இ.நெறி முகவரியாகவும் இந்த அமைப்புமுறையை இணைய நெறிமுறை பதிப்பு 4 அல்லது இ.நெறி ப4 என்றும் வரையறுத்தார்கள். ஆனால், அபாரமான இணைய வளர்ச்சியின் காரணமாகவும், இருக்கும் முகவரிகள் குறைந்து வருவதாலும், 128-பிட்களைப் பயன்படுத்தும் முகவரிக்காக ஒரு புதிய முகவரி அமைப்புமுறை (இ.நெறி ப6) என்பது 1995[2] அன்று உருவாக்கப்பட்டு, 1998-ல் RFC 2460 ஆல் தரமுறைப்படுத்தப்பட்டது.[3] இ.நெறி முகவரிகள் பைனரி எண்களாக சேமிக்கப்பட்டாலும் கூட (எடுத்துக்காட்டாக, 208.77.188.166 (இ.நெறி ப4 முறை) மற்றும் இ.நெறி ப6 முறையில் 2001:db8:0:1234:0:567:1:1), பொதுவாக அவை மனிதர்கள்-படிக்க கூடிய வகையில் தான் காட்டப்படுகின்றன.

இணைய நெறிமுறையானது வலையமைப்புகளுக்கு இடையில் தரவு பேக்கெட்களை ரௌட்டிங் செய்யும் பணியையும் மேற்கொள்கிறது. அத்துடன் ரௌட்டிங் அமைப்புமுறையில் அனுப்பும் மற்றும் பெறும் கணைகளின்(node) இடங்களையும் இ.நெறி முகவரிகள் குறிப்பிட்டு காட்டுகின்றன. இந்த தேவைக்காக, இ.நெறி முகவரியின் சில பிட்கள் ஒரு துணை-வலையமைப்பை (sub-network) உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பிட்களின் எண்கள் CIDR குறியீட்டில் குறிப்பிடப்படுகின்றன. இவை இ.நெறி முகவரியுடன் சேர்ந்து அனுப்பப்படும். எடுத்துக்காட்டாக, 208.77.188.166/24 .

தனிமுறை வலையமைப்புகளின் (Private Network) அபிவிருத்திகளால், இ.நெறி ப4 முகவரிகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுவிடக்கூடிய அபாயம் ஏற்பட்டதால், தனிப்பட்ட முகவரியின் (private address) ஒரு தொகுப்பு RFC 1918 இன் படி ஒதுக்கி வைக்கப்பட்டது. இந்த தனிமுறைப்பட்ட முகவரிகளை எந்த தனிமுறைப்பட்ட வலையமைப்புகளிலும் (private network) பயன்படுத்திக் கொள்ளலாம். இவை பெரும்பாலும் உலகளாவிய பொது இணையத்தில் வலையமைப்பு முகவரி மாற்றிகளுடன் பயன்படுத்தப்பட்டன.

இணையத்திற்காக ஒதுக்கப்படும் எண்களின் ஆணையம் (Internet Assigned Numbers Authority - IANA) சர்வதேச அளவில் இ.நெறி முகவரிகளை ஒதுக்கீடு செய்வதை நிர்வகிக்கிறது. வட்டார இணைய பதிவகங்களுக்கும், ஏனைய பிற நிறுவனங்களுக்கும் இ.நெறி முகவரி தொகுப்புகளை ஒதுக்கி அளிக்க, இந்த ஐஏஎன்ஏ (IANA) ஐந்து பிராந்திய இணையப் பதிவகங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments

Close Menu