Ad Code

Responsive Advertisement

இணைய உலகம்


விரல் நுனியில் உலகம் கடந்த காலங்களில் வெறும் கற்பனையாக இருந்தது. இன்று கண்ணெதிரில்   அனைவர் கைகளிலும் கையடக்கமாக இருந்துகொண்டு உலகத்தின் எல்லைகளை அங்குலமாக பிரித்து அடிக்கொரு தகவல் தொடர்பு சாதனமாக வியாபித்து நிற்கிறது. இதன் பிரமாணம் மிகபெரியது. அதன் நன்மைகள் ஏராளம் இருப்பது போன்றே தீமைகளும் வியாபித்து கிடப்பது என்னவோ நிதர்சனமே. பாதுகாப்பான இணைய பயன்பாட்டை மேற்கொள்வது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது கேள்விக்குறியான விடயமே.

இணையம் / வலையயமைப்பு என்றால் என்ன ? இந்த கேள்விக்கு முதலில் தெளிவான ஓர் முடிவுக்கு வந்தாக வேண்டும். இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணனிகளை ஒன்றாக இணைத்து தரவுகளை பரிமாற்றி கொள்வதற்கும் வளங்களை பகிர்ந்து கொள்வதற்கும் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் வலையமைப்பு எனப்படுகிறது. புவியில் ரீதியாக வலையமைப்பின் அமைப்பு பெரிதாக்கப்டும் பொழுது தொழில்நுட்பம் வேறுபடுகிறது. அருகருகே இரு கணனிகள் தரவுப்பரிமாற்றப் படும் போது பயன்படும் தொழில் நுட்பத்துக்கும் உலகத்தின் இரு முனைகளுக்கு இடையில் தரவுகளை பரிமாற்றுவதர்க்கும் இடையில் உள்ள வேறுபாடு தகவல் தொடர்பாடல்  தொழில் நுட்பத்தின் வளர்ச்சியின் விளைவு என்பதே நிதர்சனம்.



LAN – Local Area network  

புவியியல் ரீதியாக குறுகிய இடத்துக்குள் உதரணமாக ஒரு கட்டடதிற்கு குட்டப்பட்ட பகுதிக்குள் கணனிகளுக்கு இடையில் தரவுகளை பரிமாற்றிக்கொள்வதற்கு  அமைக்கப்படும் வலையமைப்பு

HAN / PAN – Home area network / Personal area network

வீட்டில் பாவிக்கப்படும் கணனிகளுக்கு இடையில் மாத்திரம் தரவுகளையும் வளங்களையும் பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்படும் வலையமைப்பு HAN எனப்படுகிறது.

CAN – Campus area network

பல்கலைக்கழக வளாகத்துக்குள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும்  ஊழியர்களுக்கு இடையில் தரவு மற்றும்  வளங்களை பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்படும் வலையமைப்பு

MAN – Metropolitan Area Network

 ஒரு நகர்பகுதிக்குள் கணனிகளுக்கு இடையில் தரவுகளையும்  வளங்களையும்  பகிர்ந்துகொள்ளகூடியதாக அமைக்கபடும் வலையமைப்பு.

WAN – Wide area network

நகரங்களுக்கு இடையில் அல்லது உலகமயப்படுத்தபட்ட பாரிய அளவான தூரங்களுக்கு தரவுகளையும் வளங்களையும் பகிர்ந்து கொள்ளும் முகமாக உருவாக்கப்படும் வலையமைப்பு.

Post a Comment

0 Comments

Close Menu