200.48.56.0 எனும் IP முகவரியில் 8 உப குழுக்கள் பிரிக்க வேண்டியுள்ளது மேலும் ஒவொரு
குழுவினதும் உப குழு முகவரி (Subnet ID), முதலாவது கணணி (1st Host IP), கடைசி கணணி (Last Host IP), ஒலிபரப்பு முகவரி (broadcast IP) போன்றவற்றையும், புதிய Subnet mask போன்றவற்றை காணும் முறையை செய்முறை மூலம்
விளக்குக.
தரப்பட்ட IP முகவரி = 200.48.56.0
32 bit பெறுமதியை கொண்ட IPV4 முகவரியாகும்
முதல் எட்டு
பிட்டுக்களின் பத்து அடிமான பெறுமதி - 200
Class A
1.0.0.1 தொடக்கம் 126.255.255.254 வரை
127 வலையமைப்புகளும் ஒவ்வொரு உப வலையமைப்பிலும் 16 மில்லியன் கணணிகளும் இணைக்கப்பட முடியும் .
Class B
128.1.0.1 தொடக்கம் 191.255.255.254 வரை
16,000 வலையமைப்புகளும் ஒவ்வொரு உப வலையமைப்பிலும் 65,000 கணணிகளும் இணைக்கப்பட முடியும்
Class C
192.0.1.1 தொடக்கம் 223.255.254.254 வரை
2 மில்லியன் வலையமைப்புகளும் ஒவ்வொரு உப வலையமைப்பிலும் 254 கணணிகளும் இணைக்கப்பட முடியும்
Class D
224.0.0.0 தொடக்கம் 239.255.255.255 வரை
Multicast groups க்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
Multicast groups க்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
-Multicast is a packet or a message sent across a network by a single host to multiple clients or devices.
Class E
240.0.0.0 தொடக்கம் 254.255.255.254 வரை
ஆய்வுகளுக்காகவும் எதிர்கால தேவைக்காகவும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள்ளது.
இதனடிப்படையில் நமக்கு தரப்பட்ட IP முகவரியானது வகுப்பு C பிரிவுக்குள் உள்ளது ஆகவே default Sub net mask ஆனது 255.255.255.0 ஆகும்.
8 உப குழுக்களாக பிரிக்குமாறு வேண்டப்பட்டு உள்ளது ஆகவே
2^n = 8
2^n = 2^3
வலையமைப்பு பகுதிக்கு ஒதுக்கப்பட வேண்டிய பிட்டுகளின் எண்ணிக்கை = 3
ஆகவே புதிய
New Sub net mask = 11111111.11111111.11111111.11100000
255 . 255 . 255 . 224
1 1 1 0 0 0 0 0
128 64 32 16 8 4 2 1 = 224
Increment bit இன் பெறுமதி = 32
Increment bit இன் பெறுமதியை(32) ஒலிபரப்பு முகவரியின் IP உடன் கூட்டப்படும் போது அடுத்த அடுத்த குழுக்களின் IP முகவரிகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.
ஒவ்வொரு உப குழுவும் புதிய Sub net mask ஆன 255.255.255.224 உள் உள்வாங்கப்படவேண்டும் Sub net mask குழுக்களுக்கு இடையில் வேறுபட்டால் குழுக்களில் உள்ள கணினிகளுக்கு இடையில் தொடர்பாடல் நிகழாது.

குழு | உப வலை IPமுகவரி | முதல் கணணி IPமுகவரி | கடைசி கணணி IP முகவரி | ஒலிபரப்பு IP முகவரி |
---|---|---|---|---|
01 | 200.48.56.0 | 200.48.56.1 | 200.48.56.30 | 200.48.56.31 |
02 | 200.48.56.32 | 200.48.56.33 | 200.48.56.62 | 200.48.56.63 |
03 | 200.48.56.64 | 200.48.56.65 | 200.48.56.94 | 200.48.56.95 |
04 | 200.48.56.96 | 200.48.56.97 | 200.48.56.126 | 200.48.56.127 |
05 | 200.48.56.128 | 200.48.56.129 | 200.48.56.158 | 200.48.56.159 |
06 | 200.48.56.160 | 200.48.56.161 | 200.48.56.190 | 200.48.56.191 |
07 | 200.48.56.192 | 200.48.56.193 | 200.48.56.222 | 200.48.56.223 |
08 | 200.48.56.224 | 200.48.56.225 | 200.48.56.254 | 200.48.56.255 |
ஒவ்வொரு உப குழுவும் புதிய Sub net mask ஆன 255.255.255.224 உள் உள்வாங்கப்படவேண்டும் Sub net mask குழுக்களுக்கு இடையில் வேறுபட்டால் குழுக்களில் உள்ள கணினிகளுக்கு இடையில் தொடர்பாடல் நிகழாது.
0 Comments