ஆள்கள பெயர் சேவையகம் - DNS
– Domain Name Server
ஆள்கள பெயர் சேவையகம் என
அழைக்கப்படுவது இணையத்தில் பங்கேற்கும் வாடிக்கையாளருக்கு ஆள்கள பெயருக்குரிய(facebook.com) IP முகவரிகளை (31.13.78.35) வழங்கும் சேவையக கணினியாகும்.
இணையத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு சாதனங்களும்
இரண்டு வகையான முகவரிகளை கொண்டு இருக்க வேண்டும்
- MAC – Media Access Control Address Eg(00:A0:C9:14:C8:29)
- .IP - Internet Protocol Address Eg:(200.56.89.36)
இணையத்தில் இணைய தளங்களை தேடுவதற்கு அவ் இணையதளங்களின்
பெயர்களை பின்வருமாறு yahoo.com , google.com
,facebook.com,ictbee.com உள்ளிடுவது வழமை நாம்
ஓர் இணையதளத்தின் பெயரை ictbee.com என உள்ளிடும் பொழுது
நாம் பயன்படுத்தும் இணைய உலாவியானது(Web browser – Chrome,mozila)அதை இவ்வாறாக மாற்றியமைக்கும் ictbee.com --> http://www.ictbee.com
இதன் விளக்கமானது வையக
விரிவு வலையில் (WWW) காணப்படும் ictbee.com எனப்படும் சேவையகத்தை http – Hyper Text
Treansfer protocol நெறிமுறையின் ஊடு தொடர்பு கொள் என்பதாகும். இக் கட்டளையானது
இனைய உலாவியினால் IP பொதியாக இணையத்துக்குள் விடப்படும் மேற்படி விடப்பட்ட IP
பொதியானது இணையத்தில் ictbee.com எனும் சேவையகத்தை அடையவேண்டும். அனால்
இணையத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு கணனிகளையும்
அடையாளப்படுத்தும் விதமாக கணினிகளுக்கு IP முகவரிகளே காணபடுகின்றது. இதேவகையில்
ictbee.com எனும் சேவையகதுக்கும் ஓர் IP முகவரி உண்டு அவ் IP முகவரிகள்
தெரியுமிடத்து நேரடியாகவே சேவையக கணணிகளை தொடர்பு கொள்ளமுடியும் சென்றடைய வேண்டிய IP முகவரிகள் தெரியாமல் இணையத்தில் விடப்படும்
IP பொதிகளை சரியான IP முகவரிகளை வழங்கும் சேவையை DNS செய்துவருகின்னது. DNS இன்
செற்பாடு இல்லையெனில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையதளங்கள் அனைத்தின் IP
முகவரிகள் நினைவில் வைத்திருக்க வேண்டும். கையடக்கக தொலைபேசிகளில் தொலைபேசி
இலக்கங்களுக்கு பதிலாக பெயர்களை இட்டு பதிந்து வைத்தல் போன்ற செயற்பாடு.
0 Comments