Ad Code

Responsive Advertisement

DHCP - Dynamic Host Configuration Protocol


இணையத்தில் இணையும்  கணணிகள் அனைத்திற்கும் IP முகவரிகள் கட்டாயமானதாகும். IP முகவரிகள் இன்றி இணையத்தில் எந்த ஒரு தொடர்பாடலும் இல்லை. நாம் இணைய தொடுப்பை பெற்றுக்கொள்ள பதிவு செய்துள்ள நிறுவனமே (மொபிடேல்,டயலொக்,ஏர்டெல்,.....etc)நமக்கு IP முகவரிகளை வழங்குகின்றது. இவர்களை நாம் ISP-  internet service providers என் அழைப்பதுண்டு.

இரண்டு வகையான IP முகவரிகள் வாடிகையாளர்க்கு வழங்குவார்கள் , static, dynamic,

Static IP - நிரந்தர IP முகவரி
Server கணணி பாவனையாளருக்கு.

Dynamic IP - மாறும் தன்மையுடைய IP
சாதாரண இணைய பாவனையாளருக்கு.
இவ் வகையான ip முகவரிகள் சிறுது நேரத்துக்கு ஒரு முறை மாறும் தன்மை உடையவை. சாதாரண இணைய பாவனையாளருக்கு இந்த வகையான IP முகவரிகளே பாதுகாப்பானவை.

ISP கள் குறிக்கப்பட்ட எல்லைக்குள் IP முகவரிகளை வாடிகையாளர்க்கு வழங்க கூடியவை...

இவ் IP முகவரிகளை தெரிந்து கொள்ள பல வழிகள் இருப்பினும் இலகுவாக GOOGLE இல் WHATS MY IP ? என தேடுவதின் மூலம் இலகுவாக நமது IP முகவரிகளை அறிந்து கொள்ள முடியும்.

இவ் IP முகவரிகளை வாடிகையாளர்க்கு வாடிக்கையாளரின் கணக்கின் தன்மைக்கு ஏற்ப ISP இல் இயங்கும்  artificial intelligence  செயற்கை நுண் மதி திறன் வாய்ந்த சேவையக கணனி DHCP எனப்படுகிறது.

நாம் பல கணணியை அடிப்படையாக கொண்ட நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்து இருப்பின் நமது நிறுவனத்தில் இயங்கும் கணணிகளுக்கு IP முகவரிகள் அவசியமாகிறது. அது போன்ற சந்தர்பங்களில் நமது திசைவி( Router) அல்லது Modem இல் செயற்படும் DHCP சேவையானது நமக்கு IP முகவரிகளை பிரித்து வழங்கும். DHCP சேவை இல்லை எனில் நமது கணணிகளுக்கு குறிய IP முகவரிகளை நாமாகவே மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments

Close Menu