Ad Code

Responsive Advertisement

DHCP - சேவையகம் என்றால் என்ன ?

Dynamic Host Configuration Protocol


DHCP சேவையகத்தின் பயன்பாடானது வலையமைப்பில் பங்குபெறும் இலத்திரனியல் சாதனங்களுக்கு IP (Eg-200.56.25.36) இலக்க முகவரிகளை வழங்கும் செயற்பாடாகும்.

வலையமைப்பில் / இணையத்தில் பங்கு பெறும் அனைத்து இலத்திரனியல் சாதனங்களுக்கும் IP முகவரிகள் இல்லாமல் தொடர்பாடல் நடைபெற முடியாது.

Static / Dynamic IP முகவரிகளை அவர் அவர் கணக்குகளுக்கு ஏற்ற  வகையில் IP (Eg-200.45.25.35) இலக்கங்களை  தனக்கு ஒதுக்கப்பட்ட IP எல்லைக்குள் இருந்து வழங்கும் ,

நமது கணனிகள் / திசைவி (Router) இணைய தொடர்பை ஏற்படுத்த முனைகையில், முதலாவதாக ISP (Internet Service Provider) யிடம் தொடர்ப்பை மேற்கொள்ளும் பொழுது , ISP இடம் இயங்கும் DHCP சேவையகமானது. நமக்கு இவ் IP முகவரி(களை) வழங்கும்.

உள்ளக வலையமைப்பில் (LAN Network) திசைவியுடன் DHCP சேவை காணப்படுவதால் உள்ளக கணனிகளுக்கு IP முகவரிகளை ரௌட்டர் உடன் இணைக்கப்பட்டுள்ள DHCP சேவையானது IP இலக்கங்களை எழுந்தமானமாக வழங்குகின்றது.

DHCP சேவை இல்லை எனில் வலையமைப்பில் பங்கு பெறும்  அனைத்து கணனிகளுக்கும் IP முகவரிகளை நாமாகவே (Manually) தனித்  தனியாக   வழங்க வேண்டி இருக்கும். 
     
  



Post a Comment

0 Comments

Close Menu