வேகமாக மாறிவரும் தொழில் நுட்ட்பம் சார்ந்த இந்த உலகத்தில் மொழி ஒரு தடையாக இருந்து விடக்கூடாது நமது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள. இந்த வகையில் மிகப்பெரும் சவாலாக இருப்பது இணையத்தில் நமது சொந்த மொழியில் தட்டச்சு (Typing) செய்வது. மேலும் நமது தாய் மொழியில் தரவுகளை தேடுவது ஆங்கிலம் அனைத்துக்கும் அடித்தளமாக இருப்பினும் நமது மொழியின் சுவை மாறிவிடக்கூடாது என்பதில் Google நிறுவனம் தெளிவாக உள்ளது. Unicode எழுத்துருக்களை கொண்டு நமது மொழியில் தட்டச்சு செய்வது எப்படி என்பதை கீழ்வரும் பகுதியில் படிமுறைகளாக குறிப்பிட்டு உள்ளேன்.
படி -1
Google தேடல் பொறியில் "Google Tamil Imi" என உள்ளீடு செய்து கிடைக்கப்பெ றும் பெறுபேறுகளில் முதலாவது தொடுப்பு இணைப்பை தெரிவுசெய்யவும். அல்லது கீழ்வரும் இணைய தொடுப்பை தெரிவு செய்யவும்
படி 2
வலதுபக்கம் தோன்றும் "Choose Your Language " என்பதில் உங்களுக்குரிய மொழியை தெரிவு செய்து கொள்ளவும் பல மொழிகளை ஒன்றாக தெரிவு செய்து கொள்ளவும் முடியும். "Terms of Service" ஐ ஆமோதித்து கொள்ளவும்
படி 3
கணனியில் நிறுவப்பட்ட பின்பு "Task Bar" பகுதியில் விருப்பமான மொழியை தெரிவு செய்து கொள்ளவும். மிகவும் இலகுவாக ஆங்கிலத்திலேயே உங்களுக்கு தேவையான மொழி எழுத்துருக்களை தட்டச்சு செய்து கொள்ள முடியும்.
Unicode எழுத்து உருக்களை பயன்படுத்துவதால் நமது ஆவணங்களை இணையத்திலும் பயன்படுத்தி கொள்ளமுடியும்.
பாமினி எழுத்துருக்களை பயன் படுத்துவதை தவிர்த்து Unicode எழுத்துருகளை பயன்படுத்துவது அலுவலக நடவடிக்கைக்கு மிகவும் உகந்தது.
0 Comments